Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆடி ராசி பலன் மிதுனம் : ஆடி ராசி பலன் மிதுனம் : ஆடி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம் : ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ரிஷபம் : ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்


வாழ்க்கை என்பது ஜெயிப்பதற்காகத் தான் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தன்னம்பிக்கை கூடும். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியமாக செயல்படக் கூடிய நிலை உருவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வீடு, வாகனம், வசதி வாய்ப்பு என்ற கனவு நனவாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். எந்த ஒன்றாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். இந்த நேரத்தில் தனக்காரகன் குருவும் ஆக.9 வரை அஸ்தமனமாக இருப்பதால் திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பொன், பொருள் என்ற கனவு ஆக.9 க்கு பிறகு நிறைவேறும். பெரியோரின் ஆதரவு கிடைப்பதுடன் தெய்வ அருளும் உண்டாகும். ஜென்ம ராசியை விட்டு உங்கள் விரயாதிபதி செவ்வாய் ஆக.2 முதல் விலகுவதால் மனதில்  நம்பிக்கை பிறக்கும். பயம், பதட்டம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். செலவிற்கு ஏற்ற வரவு வந்து கொண்டிருக்கும். பெண்களுக்கு பொறுப்பு கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் காற்று, அடைமழை ஏற்பட வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: ஜூலை 26

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.


பரிகாரம்: அகோர மூர்த்தியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ரோகிணி

திட்டமிட்டு செயல்படுவதில் சாமர்த்தியசாலியான உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஆக.1 வரை ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயலில் தடுமாற்றம், குழப்பம் ஏற்படும். எடுத்த வேலைகள் இழுபறியாகும். மனதில் பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஞான மோட்சக்காரகன் கேது நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். ஆக.1 முதல் வித்யாகாரகன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அறிவு பூர்வமாக செயல்படக்கூடிய உங்களுக்கு அதில் பின்னடைவு ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். யாரை நம்புவது! யாரை நம்பக்கூடாது? என தெரியாமல் போகும். வியாபாரிகளுக்கு சந்தை நிலவரத்தை கணிக்க முடியாமல் போகும். அதனால் முதலீடு அதிகரித்தாலும் லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. தொழில் ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஆதாயம் கூடும். வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்கிரமாக இருப்பதால் இதுவரை சுலபமாக நடந்த வேலைகள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.  ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். 

சந்திராஷ்டமம்: ஜூலை 27

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 20, 24, 29. ஆக. 2, 6, 11, 15


பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் விலகும். மனம் தெளிவடையும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

நடப்பது எதுவாக இருந்தாலும் அதை நம்மால் மாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். செவ்வாய் ஆக.1 வரை உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதால்  குழப்பம், வீண் சிந்தனை, எடுக்கும் வேலையில் இழுபறி ஏற்படும். உங்கள் வழக்கமான திறமையும் இந்த நேரத்தில் வெளிப்படாமல் போகும். உறவினர்கள், உடன் இருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பர். ஆக.2 முதல் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு, உடலில் சங்கடத்தை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த பணமும் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களைப் பாதுகாப்பார். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் கூடும். உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர் விலகிச் செல்வர். வேலையில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.  தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் நிம்மதி நீடிக்கும். சங்கடம் ஏற்படாமல் போகும். புதியவர்கள் தலையீட்டை குடும்பத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி முடிவு எடுப்பது நல்லது.  அந்நியரால் வீண் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவதும், ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் அவசியம்.

சந்திராஷ்டமம்: ஜூலை 28

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 18, 24, 27. ஆக. 6, 9, 15


பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட சங்கடம் தீரும்.  நன்மை நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar