* திருநீறு பூசாத நெற்றி பொலிவுடன் இருக்காது. * சுறுசுறுப்பாக செயல்படு. எல்லாம் உன் வசமாகும். * உன் உழைப்பில் வாழ்வதே உண்மையான கவுரவம். * எல்லோரிடமும் இனிமையாகப் பேசு. * நல்லவரோடு பழகு. அவர்களின் அறிவுரையே உனக்கு சொத்து. * தர்மம் செய்வதில் எப்போதும் விருப்பம் கொள். * நல்ல செயல்களை முன்னின்று செய். * இளமைக் காலமே படிப்பதற்கு ஏற்ற காலம். * உனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கும் சொல்லிக்கொடு. * எதையும் கூடுதலாக பேசாதே. சொல்வதை தெளிவாகச் சொல். * பாடுபட்டு செல்வம் சேர்த்தாலும் விதிப்படிதான் அனுபவிக்க முடியும். * அதிகாலையில் கண் விழித்ததும் கடவுளை வணங்கு. * தாயை விடப் பெரிய கோயிலும், சிறந்த தெய்வமும் இல்லை. * உன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் கடவுளின் செயலே. * அரிசியும் நீரும் இல்லாத வெறும் பானையில் பொங்கல் பொங்கி வருமா? அதுபோல் நல்லதை செய்தால் தானே நல்லது கிடைக்கும். * பெருமை தரும் வழியில் சென்று கொண்டே இரு. * அதிகமாக சாப்பிடாதே. இல்லாவிட்டால் கஷ்டப்படுவாய். * நன்றாக யோசித்த பிறகு ஒரு செயலில் இறங்கு. * குணவதியான பெண் உள்ள வீட்டில் எல்லா நன்மையும் நிறைந்திருக்கும். * நல்ல நுால்களை தேடிப்படி. அறிவு வளரும். * வறுமையான காலத்திலும் நல்லவர்களின் குணம் மாறாது.