* நல்லதைச் செய். அந்த நன்மை உன்னை காக்கும். * பிறரிடம் உள்ள குறைகளை பார்க்காதே. உன்னிடம் உள்ள குறைகளை கவனி. * உன்னை நேசிக்க கற்றுக்கொள். பிறரை வெறுக்கமாட்டாய். * எண்ணத்தால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காதே. * நல்ல மனிதனாக வாழ்ந்தால் இயற்கையே உனக்கு துணை நிற்கும். * ஆசையே துன்பத்திற்கு காரணம். முடிந்தவரை அதை தவிர்த்திடு. * உலகில் எப்போதும் உண்மை ஒன்றே நிலைத்திருக்கும். * அதிகாரத்தால் காரியம் சாதிப்பவன் நல்லவனாக இருக்கமாட்டான். * உனக்கேற்ற காலம் வரும். அப்போது முயற்சியில் வெற்றி பெறுவாய். * வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். * கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என நம்பாதே. * நீ செய்யும் செயல்கள் அனைத்தும், நிழல் போல உன்னை தொடரும். * மனதில் இருப்பதை சொல். இல்லாவிட்டால் மவுனமாக இரு. * யார் சொல்கிறார் என்பதை விட, அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம். * அதிகமாகப் பேசுவதால் மட்டுமே நீ அறிஞனாக முடியாது. * தக்க சமயத்தில் உனக்கு உதவி செய்பவனே நல்ல நண்பன். * மனதை கட்டுப்படுத்து. இல்லாவிட்டால் அது உன்னை கட்டுப்படுத்தும்.