திருப்புத்தூர் அம்மன் கோயில்களில் பக்தர்கள் விரதம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2026 04:07
திருப்புத்தூர்: திருப்பத்தூரில் ஆடி பிறப்பு மற்றும் முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் காப்பு கட்டி ஆடி விரதம் துவங்கினர்.
திருப்புத்தூர் அம்மன் கோயில்களில் ஆடிமாதப்பிறப்பு மற்றும் முதல் வெள்ளி என்பதால் இன்று காலை திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காப்பு கட்டி ஆடி மாத விரதத்தை துவக்கினர். ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயிலில் காலையில் கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிேஷகம் நடந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசித்தனர். இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கடைசி வெள்ளியன்று பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி,அலகு குத்தியபடி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்துவர். அதற்காக பலரும் இன்று காப்புக்கட்டி விரதம் துவங்கினர். புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில், தென்மாப்பட்டு சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.