பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2026 10:07
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து தீபாரதனை வழிபாடு நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. அடி சுவாதியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.