* எதையும் இலவசமாகப் பெறாதே. அது சுயமரியாதையை கெடுக்கும். * சுவையான பழம் தரும் மரத்தைப் போல, பிறருக்கு உதவி செய். * குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடு. * கடமையை செய்யாமல் நேரத்தை வீணாக்காதே. * எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது. * போற்றுதலையும், துாற்றுதலையும் பொருட்படுத்தாதே. * ரோஜாவின் அழகையும், மணத்தையும் பார்ப்பவன் அறிவாளி. அதன் முள்ளை பார்ப்பவன் முட்டாள். * நாக்கின் ருசிக்காக அலையாதே. விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடு. * உணவை வீணாக்காமல் இருந்தால் அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். * உணவு, பேச்சு இரண்டும் நாக்கு சம்பந்தப்பட்டது. நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும். * உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப் பார். * அறிவுரை சொல்வதை விட, பயனுள்ள வேலையைச் செய். * உலகம் ஒரு பல்கலைக்கழகம். சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே. * வாழ்வில் குறுக்கிடும் மேடு, பள்ளங்களை கண்டு கலங்காதே. அதை பாடமாக எடுத்துக்கொள்.