Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத முக்கிய விசேஷ நாட்கள் நல்லன எல்லாம் தரும் திருக்கடையூர் அபிராமி நல்லன எல்லாம் தரும் திருக்கடையூர் ...
முதல் பக்கம் » துளிகள்
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் இறை சேவையுடன் மகத்தான மக்கள் சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில் இறை சேவையுடன் மகத்தான மக்கள் சேவை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
10:07

இறைவனுக்கு சேவை செய்வதோடு, மனித குலத்துக்கும் ஆன்மிக மற்றும் பொது சேவை செய்வதில் திருப்பூர் பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது, திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்.

திருப்பூரில், கருவம்பாளையம் பகுதியில், மங்கலம் ரோட்டில் அமைந்துள்ள பூச்சக்காடு பகுதியில், 70 ஆண்டுகளுக்கு முன், வில்வ மரத்தடி விநாயகர் சிறிய அளவிலான ஒரு கோவிலை அமைத்து அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வந்தனர். அப்பகுதியினர் ஒன்று சேர்ந்த மேற்கொண்ட முயற்சியால் கடந்த 1996ம் ஆண்டில் புதிய கோவில் அமைத்து கும்பாபிஷேகம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, 2002ம் ஆண்டில் பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 2019ல் கோவில் விஸ்தரிப்பு செய்து, மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதிகள் மற்றும் கோவில் வளாகம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கோவிலில் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.

ஞான முதல்வனுக்கு நாளும் வழிபாடு

ஆடி மாதம் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று பூஜை செய்வர்.

ஆவணி மாதம், விநாயகர் சதுர்த்தி நாளில், ஸ்ரீசெல்வ விநாயக பெருமானுக்கு, 32 திரவியங்களில் மஹா அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை, கொலுக்கட்டை வைத்து பூஜை என வெகு விமரிசையாக நடைபெறும்.

நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் பிரம்மாண்டமான கொலு வைத்து பூஜை நடைபெறும்.

மாதந்தோறும் கந்தசஷ்டி பெருவிழா நடக்கிறது. குறிப்பாக, ஐப்பசி மாதம், பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் காப்பு கட்டி ஏழு நாள் முழு விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குகின்றனர். அந்த ஏழு நாட்களும் முருகப் பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், முருகன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, மஹா சிவராத்திரி விழா சிவபெருமானுக்கு சிறப்பான முறையில் நடக்கிறது. மஹா சிவராத்திரி இரவு முழுவதும், அபிஷேகம், அலங்கார பூஜைகளும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெறும். தைப்பூசத்துக்கு இங்கிருந்து, பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். பழநி கோவிலில் நடைபெறும் மூன்று நாள் பூஜைகளில் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும், கும்பாபிஷேக ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் 30 நாளும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும். ஆண்டுதோறும் ஆறு முறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும். தெலுங்கு வருடப்பிறப்பு பங்குனி யுகாதி முன்னிட்டு அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறும்.

பங்குனி உத்திர நாளில், 32 திரவியங்களால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. கடந்த 35 ஆண்டாக, தொடர்ந்து ஆறுபடை யாத்திரையில் இங்கிருந்து முருகபக்தர்கள் செல்கின்றனர். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளும், கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில், சக்‌ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்புடன் இணைந்து மாதம்தோறும், 2வது ஞாயிற்றுக்கிழமை கண் பரிசோதனை முகாம், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை முகாம், மூலிகை சொட்டு மருந்து கலிக்கம் , வர்மா வைத்தியம் ஆகியன நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றப்படுகிறது. அதேபோல் சுதந்திர தினம், தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

நேசக்கரம் நீட்டிய சேவை அமைப்புகள்


கோவில் நற்பணி மன்றத்தோடு இது போன்ற பல்வேறு சேவை திட்டங்களில் பல அமைப்புகள் இணைந்துள்ளன. திருப்பூர் லயன்ஸ் கிளப், திருப்பூர் மேற்கு குமரன் ரோட்டரி சங்கம், சக்‌ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம், பழனிச்சாமி பொன்னம்மாள் சேவா அறக்கட்டளை, சிவனடியார்கள் தொண்டர் கூட்டம், தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவில் நற்பணி மன்றம்,செங்குந்தபுரம் ராஜ விநாயகர் ஆலய கமிட்டி, அகில பாரத முருக பக்தர்கள் சேவா அறக்கட்டளை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் சண்முகா முருகன் மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar