* கிழக்கு நோக்கி சாப்பிடு. ஆயுள் அதிகரிக்கும். * எறும்பை போல சுறுசுறுப்பாக செயல்படு. மனஅமைதி கிடைக்கும். * பணம் சேர்ப்பதால் மட்டும் இன்பத்தை பெற முடியாது. * ருசிக்கு அடிமையாகாதே. கிடைத்ததை திருப்தியாக சாப்பிடு. * தன்னிடம் உள்ளதை மரம் பிறருக்கு கொடுக்கிறது. அதைப் போல நீயும் இரு. * துாக்கம் வராத போது நீதி நுால்களைப் படி. நிம்மதி கிடைக்கும். * பொன் உருகினால் அதில் ரத்தினக்கல் பதியும்; மனம் உருகினால் கடவுளின் அருள் பதியும். * அனைவரிடமும் அளந்து பழகு. இல்லாவிட்டால் துன்பமே மிஞ்சும். * பெண்களை அழாமல் பார்த்துக் கொள்வது ஆணின் கடமை. * கடவுளை வழிபடுவதைப் போல் அடியார்களையும் வழிபடு. * உடற்பயிற்சியால் உடலும், தியானத்தால் மனமும் வலிமை பெறும். * தெய்வீக வழியில் நடப்பவர் ஒழுக்கமாக வாழ வேண்டும். * பிறர் செய்த உதவியை மறக்காதே. அதை மறப்பது பெரும்பாவம். * தற்போது நடக்கும் கலியுகத்தில், பக்தியின் மூலம் மோட்சம் பெறலாம். * சிவம் வேறு; அறிவு வேறல்ல. அறிவே சிவம்.