* கங்கையில் நீராடுங்கள். பாவம் தொலையும். * ஒருவர் செய்த நல்லது, கெட்டது மட்டுமே கடைசி வரை கூட வரும். * தொடர்ந்து ஒரே மந்திரத்தை ஜபித்திடு. அந்த மந்திரம் சித்தியாகும். * குருவின் உபதேசத்தை பின்பற்று; பேராசை அழியும். * வேண்டுதல் இல்லாமல் கடவுளை வழிபடுவதை ‘நிஷ்காம்ய பக்தி’ என்பர். * இறப்பு என்பது துாக்கம். பிறப்பு என்பது துாக்கத்தில் இருந்து விழிப்பது போலாகும். * இன்பமும், துன்பமும் கலந்தது தான் மனித வாழ்க்கை. * மனதில் ஆசை இருக்கும் வரை பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும். * முன் செய்த வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறோம். * மனம் துாய்மையானால் வாழ்வு லேசாகும். * கங்கை கரையில் வசிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். * நீ எதை மதிக்கிறாயோ அதுதான் உன்னையும் மதிக்கும். * மலர்களை கடவுளுக்கு சூட்ட வேண்டும். இல்லாவிட்டால் மரத்திலேயே இருக்கட்டும். * உன் கடமையை செய். அப்போதுதான் வினைகள் தீரும். * நல்ல மனம் கொண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகவே காண்பான். * ஞானம் பெற்றவர்கள் தர்க்கம் செய்ய விரும்புவதில்லை.