* அமைதியாக இரு. இதுவே எல்லா பிரச்னைக்கும் தீர்வு. * கடவுளுக்கு தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை. * கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார். அவர் அன்பே உருவானவர். * கடவுள் உன்னிடம் எதிர்பார்ப்பது உழைப்பு ஒன்றே. * ஒரு முயற்சியில் எவ்வளவு கடினம் இருக்கிறதோ, அந்தளவுக்கு வெற்றி வரும். * முயற்சிக்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும். * மனிதப்பிறவி என்பது மதிப்பிட முடியாதது. அதை சரியாக பயன்படுத்து. * ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. மீறினால் முடிவு எடுக்க முடியாது. * பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடு. * கோபம் முட்டாள்தனத்தின் அறிகுறி. * பிறர் உன்னை எப்படி நடத்தினாலும் கோபப்படாதே. * பிறருக்கு புத்திமதி கூறும் முன்பாக அத்தகுதி உனக்கு உள்ளதா என கவனி. * ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை. * நேர்மையாக வாழ்ந்தால் பெரிய பரிசு ஒன்று கிடைக்கும். * உற்சாகமுடன் வேலை செய். களைப்பு தோன்றாது. * நேர்மையை விட சிறந்த பாதுகாப்பு வேறில்லை.