* தினமும் கோயிலுக்கு செல்; கடவுளை வழிபட்டால் மனம் குளிரும். * நல்லவர்களுடன் விரும்பி நட்பு கொள். * நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையை பாதுகாக்கும். * உண்மையை பேசு. உன் வாக்கிற்கு மதிப்பு இருக்கும். * பிறருடைய பசியை போக்குவதே ஜீவகாருண்யம். * கடவுளை தாழ்த்தியும், மனிதனை உயர்த்தியும் பேசாதே. * மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியே ஒன்று பேசாதே. * பகட்டாக ஆடை அணிவது ஆன்மிகத்திற்கு புறம்பானது. * பெற்றோரே நமக்கு முதல் தெய்வம். * தன்னை அறிந்து வாழ்வதே உயர்ந்த இன்பம். * கோபம் வருதா... அமைதியாக இரு. * குறை இல்லாத புகழ் கொண்டவர் கடவுள் ஒருவரே. * கடவுளுக்கு நன்றி உள்ளவனாக இரு. * கடவுளின் புகழ் பாடினால் புண்ணியம் சேரும். * உலகம் நலம் பெற தினமும் வழிபாடு செய். * நல்ல நண்பர்களை ஒருபோதும் பிரிக்காதே. * ஆசை காட்டி மோசம் செய்வது பாவம். * உதவும் மனம் கொண்டவனே உண்மையான மனிதன். * நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.