Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி போற்றுதும்... ஆடி போற்றுதும்... மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் ஸ்ரீ மாகாளியம்மன் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் ஸ்ரீ ...
முதல் பக்கம் » துளிகள்
எல்லாம் வல்ல தாயே... எங்கும் நிறைந்தாயே...நலம் பெற அருளும் நாகாத்தம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லாம் வல்ல தாயே... எங்கும் நிறைந்தாயே...நலம் பெற அருளும் நாகாத்தம்மன்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
11:07

திருப்பூர், எம்.எஸ்.நகர் கிழக்கு, கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோவிலில் வழிபட்டால், சலக நன்மைகளும் நம்மை நாடி வரும் என்பது பக்தர்களின் உரைக்கும் உண்மை மொழி.

ஸ்ரீநாகாத்தம்மன் கோவில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களால் மிகவும் பயபக்தியுடன் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மூலவராக ஸ்ரீ நாகாத்தம்மன் அருள்பாலிக்கிறார். தலையில் ஐந்து தலை நாக சர்ப்பத்தை கிரீடமாக அணிந்து மக்களின் குறைகளைப் போக்கி வருகிறார். ஆரம்பத்தில் சிறிய இரட்டை வேப்பமரத்து நிழலில் அமைந்த புற்றும், ஆதி நாகாத்தம்மன் சிலையும்தான் வழிபாடு செய்யப்பட்டது.

அதன்பின், பக்தர் ஒருவர் கனவில் வந்த அம்மன் தனக்கு சிலையுடன் கூடிய திருக்கோவில் எழுப்ப வேண்டுமெனவும், அதற்கு முன்னதாக கணபதிக்கு சிலையெழுப்பவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. சுற்றியுள்ள ஊர் மக்கள் சார்பில் தேவையான நிதி மற்றும் பொருளுதவி பெறப்பட்டு ஸ்ரீ செல்வ கணபதிக்கு தனி சன்னதியும், அம்மனுக்கு சிலை செய்தும், கலசங்களுடன் கூடிய தனி சன்னதி அமைத்தும் 2018ம் ஆண்டு திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், அதனருகே பலிபீடமும், ஆளுயர திரிசூலமும், ஊஞ்சலும் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. அம்மன் சன்னதிக்கு முன்பு இடதுபுறத்தில் ஸ்ரீ கன்னிமூல கணபதியும், வலதுபுறத்தில் ஸ்ரீ செந்தில் ஆண்டவரும் அருள்பாலிக்கின்றனர். அம்மன் சன்னதிக்கு வெளியில் இடதுபுறம் வடக்கு திசையை நோக்கி ஸ்ரீஆதி நாகாத்தம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இச்சிலைதான் முதன்முதலில் வழிபாடு செய்யப்பட்டதாக, ஊர் முன்னவர்கள் கூறுகின்றனர்.

இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜையும், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நாட்களாகும். அந்த நேரங்களில், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டும், அகல்விளக்கு ஏற்றியும் பக்தர்கள் வேண்டுதல் செய்கிறார்கள். குறிப்பாக ஒன்பது வாரம் ராகு காலத்தில் பாலபிஷேகமும், விளக்கேற்றி வழிபாடும் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நடைமுறை கண்கூடாக பார்க்கப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறினால் சுவாமிக்கு சேவல் காணிக்கை செலுத்துவதை பரிகாரமாகச் செய்து வருகின்றனர். இது தவிர கிருத்திகை பூஜை, சங்கடஹர சதுர்த்தி, ஆடிமாதம் முழுதும் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும், கூழ் ஊற்றும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் வேண்டுதல் செய்த பலர் பலன் அடைந்துள்ளார்கள் என சொல்கிறார்கள். கெட்ட கனவு, பரிகார பூஜை, திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்ற தடைகளைக் களையும் ஸ்வரூபிணியாக அம்மன் விளங்கி வருகிறாள்.

குழந்தைகளின் மனதில் உள்ளதை நினைத்ததைப் புரிந்துகொள்ளும் தாயாக, பக்தர்கள் மனதில் நினைத்த வேண்டுதல்களை தீர்த்துவைக்கும் அகிலம் போற்றும் அன்னையாக, சக்தியாக ஸ்ரீநாகாத்தம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

நாமும் செல்வோம்... நாளும் செல்வோம்... நலமுடன் வாழ்வோம்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar