* ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும். * ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. * ஆடி செவ்வாய்க் கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. * ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி, சுபம் உண்டாகும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். * ஆடி மாதம் முழுதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். * ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருகி வழிபட்டால், திருஷ்டிகள் விலகி விடும். * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாஹனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பைத் தரும். * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். * ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.