Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத முக்கிய வழிபாடு மனதுக்கு நிம்மதி தரும் ஆதிசக்தி கோவில் மனதுக்கு நிம்மதி தரும் ஆதிசக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடிப்பெருக்கு நாளில் செல்வம் பெருகட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு நாளில் செல்வம் பெருகட்டும்!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
11:07

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18வது நாளையே ஆடிப் பெருக்கு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆடிப் பெருக்கு அன்று அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று, ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்? என்னென்ன காரியங்கள் செய்தால் செல்வம் பெருகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கு சிறப்பு

இந்த உலகமே பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு தான் இயங்கி வருகிறது. அதில் நீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலக மும், உயிர்களும் இயங்குவதற்கு மிக முக்கியமானது நீர். அந்த நீரை தெய்வமாக பாவித்து, அதற்கு நன்றி செலுத்தும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் மழைக்காலத்தின் துவக்கமான மாதம்.

ஆடி மாதம் வேப்பிலை தோரணம் கட்டி, அம்மன் கோவில்களில் திருவிழா துவங்கப்படும். அந்த திருவிழா நிறைவடைவதற்குள் கண்டிப்பாக அந்த ஊரில் மழை பெய்யும் என்பது ஐதீகம். இப்படி பெய்யும் மழையால் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர் நிலைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க உதவுவதால் நீரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

கொண்டாட காரணம்

காவிரி அன்னையை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு மதித்து இந்நாளில் வழிபடுகிறோம். ஆடி மாதத்தில் பெய்யும் மழையால் பொங்கி வரும் காவிரி ஆற்றின் நீர் கடைமடை வரை பாய்ந்து ஓடுவதற்கு. 15 நாட்களாவது தேவைப்படும் என்பதாலேயே ஆடி மாதத்தின் 18வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஆடிப் பெருக்கு நாளில் அனைத்து தெய்வங்களின் சக்தியையும் காவிரி தாய், தான் வாங்கிக் கொண்டு, அதனை மக்களுக்கு வழங்கும் திருநாளாகவும் ஆடிப்பெருக்கு நாள் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் புனித நீராடி, பூஜை செய்து வழிபடும் வழக்கம் உள்ளது.

துவங்குவதற்கு ஏற்றவை

ஆடிப்பெருக்கு என்பது பெருக்கத்திற்குரிய நாள் என்பதால் அனைத்து சுப காரியங்களையும் இந்த நாளில் துவங்கலாம். புதிய தொழில் துவங்குவது, புதிய கடை திறப்பது, புதிய வேலைக்கு முயற்சி செய்வது, சுய தொழில் துவங்குவது, கலைகளை கற்க துவங்குவது போன்றவற்றை செய்யலாம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆக. 3ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று ஸ்ரீராமர் அவதரித்த புனர்பூசம் நட்சத்திரம் வருகிறது. அதனால், இந்த நாளில் வளைகாப்பு போன்ற சுபகாரியங்களை நடத்தலாம்.

என்னென்ன வாங்கலாம்?

ஆடிப்பெருக்கு நாளில் கண்டிப்பாக நகை, புடவை போன்ற ஏதாவது ஒரு வாங்கியே தீர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏதாவது , மங்கல பொருட்கள் வாங்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தவர்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கன்று திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொள்ளும் போது அவற்றில் ஏதாவது பழுதடைந்திருந்தால், தேய்ந்து போய் இருந்தால் ஆடிப்பெருக்கு நாளில் மாற்றி கொள்ளலாம். குடும்பத்தில் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க போகிறோம் என்றால் ஆடிப்பெருக்கு அன்று வாங்கலாம். இது எதுவும் கிடையாது, ஆனால் ஆடிப்பெருக்கன்று செல்வம் பெருக ஏதாவது மங்கல பொருட்கள் வாங்க வேண்டும் என நினைபவர்கள் கல் உப்பு, மஞ்சள் அல்லது மஞ்சள் கிழங்கு வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து விட்டு, அதன்பின் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெண்களின் வழிபாடு

பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று குளித்து, புத்தாடை அணிந்து, தாலிச்சரடு (மஞ்சள் கயிறு) மாற்றிக் கொள்வது இன்றளவும் வழக்கமாக உள்ளது. வாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், மஞ்சள் குங்குமம் வச்சு நதிக்கு வழிபாடு நடத்தப்படும். அதில், ‘‘குடும்பம் செழிக்கணும், மழை நல்லா பெய்யணும்’ என்ற வேண்டுதலுக்கு முக்கியத்துவம் உண்டு.

நீர் வளத்துக்கும் விவசாயத்துக்கும் நன்றி

ஆடி மாதத்தில் தான் காவிரி உட்பட எல்லா நதிகளிலும் தண்ணீர் நன்றாக பெருகி ஓடும். விவசாயிகள் இந்த நாளில் இருந்து தான் விதைப்பு பணிகளை துவங்குவர். அதனால் தான், ‘நீரே உயிர்’ என்று நதிக்கு நன்றி சொல்லும் பண்டிகை இது.

இயற்கையின் ஒற்றுமை

ஆடி மாசம் தட்சிணாயனம் ஆரம்பம். தெய்வங்களுக்கு உகந்த மாதம். இந்த நாளில், இயற்கைய வணங்குவதால், மழை, விவசாயம், வாழ்க்கை எல்லாம் சிறப்பாக அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆற்றங்கரைக்கு சென்று வழிபாடு நடத்தி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, விளையாடி மகிழ்வது வழக்கமாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar