ஆவணி, ஓணம் பூஜை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 06:08
சபரிமலை: கனமழை காரணமாக சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பூஜைகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை நேற்று நடைபெற்றது. கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் சபரிமலை செல்வதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. சில பக்தர்கள் புல் மேடு வழியாக சன்னிதானம் வந்தனர். இதனால் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து நிலக்கல்லில் இருந்து திஊருக்கு திரும்பினர். ஆவணி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை வரும் வரும் 16-ம் தேதி மாலை திறக்கிறது. 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் 24- ம் தேதி மாலை நடை திறந்து 28-ம் தேதி வரை திருவோண பூஜைகள் நடைபெறும். இந்த இரண்டு கட்டங்களிலும் பக்தர்கள் செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது www. Sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.