Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்வர் பிரச்சனை : ராமேஸ்வரம் ... இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் பாரம்பரியமாக தொடரும் மும்மூர்த்திகள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் பாரம்பரியமாக தொடரும் மும்மூர்த்திகள் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
05:08

உடுமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, இன்று முதலே, பாரம்பரிய முறையில், மாட்டு வண்டிகளில் சுவாமியை தரிசனம் செய்ய, விவசாயிகள் குடும்பத்துடன் வருகின்றனர்.


உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில் பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மிகம் மற்றும் சுற்றுலாதலமாக உள்ள திருமூர்த்திமலைக்கு, ஆண்டு தோறும், தை, புரட்டாசி, ஆடி அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும். உடுமலை, பொள்ளாச்சி என சுற்றுப்புற விவசாயிகள், தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன், திருமூர்த்திமலைக்கு வருவதையும், வேளாண் வளம், கால்நடைச்செல்வங்கள் பெருக, மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து, மும்மூர்த்திகளை வழிபடுவதை பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். நாளை ஆடி அமாவாசை தினமாக உள்ளதால், சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், நுாற்றுக்கணக்கான ரேக்ளா, சவாரி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் நேற்று காலை முதலே, திருமூர்த்திமலை வந்தனர். இதனால், திருமூர்த்திமலை ரோடுகளில், பாரம்பரியமான மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு போல் திருமூர்த்திமலை களைகட்டியது. அதே போல், பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையான இன்று, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, பஞ்சலிங்கம் அருவியில், நீராடி, மும்மூர்த்திகளை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இன்று மாலை முதலே, கோவில் வளாகம் மற்றும் பிரதான ரோடுகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும், பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபடும் வழக்கமும், பல நுாறு ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகளும், பக்தர்கள் வரிசையாக நின்று, சுவாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசை தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. நுாற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை அதிகாலை, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar