Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றில் மிதந்து வந்த அம்மன் சுனாமி எச்சரிக்கை தந்த வீராம்பட்டினம் தெப்பக்குளம் சுனாமி எச்சரிக்கை தந்த ...
முதல் பக்கம் » துளிகள்
நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் தாயாக விளங்கும் செங்கழுநீர் அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் தாயாக விளங்கும் செங்கழுநீர் அம்மன்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
10:08

புதுச்சேரிக்குத் தெற்கே 8 கி.மீ., தொலைவிலும், கடலுாருக்கு வடக்கே 20 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது வீராம்பட்டினம். வங்கக்கடலோரம் வீற்றிருந்து செங்கழுநீரம்மன் தன் பேரருளாலும் ஆன்மிக சக்தியாலும் எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்து, கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் அருள்மிகு செங்கழுநீர் அம்மன் வரலாற்றுத் திருத்தலம் இது.

பெருங்கோவிலாகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் வீராம்பட்டினம் அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவிலின் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், இடதுபுறத்தில் அருள்மிகு சப்த கன்னியர் சன்னதி அமைந்திருக்கிறது. இதோடு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன் மற்றும் துர்க்கை அம்மன் சன்னதிகளும் அமைந்து, கோவில் வளாகத்திற்கு ஆன்மிக அழகைச் சேர்க்கின்றன.

பண்டைய காலத்தில் கடலும் நதியும் சங்கமிக்கும் கடற்கரை நகரங்கள் பட்டினங்கள் என்று அழைக்கப்பட்டன. வணிகத்தில் சிறந்து விளங்கிய வீராம்பட்டினத்திற்குச் சீனா, ரோம், எகிப்து, கிரேக்கம், இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வணிகர்கள் பெருமளவில் வந்து சென்றனர்.

இங்கு வந்து இறங்கும் வெளிநாட்டுப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக வீரர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழு ஒன்று இங்கு முகமிட்டிருந்தது. வீரர்கள் தங்கியிருந்த அப்பகுதி வீரர்பட்டினம் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி வீராம்பட்டினம் எனப் பெயர் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காலங்கள் கடந்த சக்தி

உறையூரைத் தலைநகரமாகவும், காவிரிப்பூம்பட்டினத்தைத் துறைமுகமாகவும் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின் காலத்திலும், அவருக்குப் பின்வந்த பல்லவ மன்னர்களின் காலத்திலும் இந்தச் செங்கழுநீர் அம்மன் மிகச் சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்பட்டது.

பிற்காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்த போதும், அம்மனின் அருள் மகிமையும் புகழும் எல்லையற்றுப் பரவியது. பிரெஞ்சு அதிகாரிகளும்கூட அம்மனின் அற்புதங்களைக் கண்டு வியந்து வணங்கியதாக வரலாறு சொல்கிறது.

இன்றைக்கும் உலகெங்கிலும் உள்ள ஆன்மிக அன்பர்கள் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மனைத் தேடி வந்து வழிபட்டுச் செல்கின்றனர். துன்பங்களோடு வருவோரின் துயரங்களைத் தீர்த்து, நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் தாயாக விளங்கும் இந்த அம்மனின் அருள் சக்தி, ஒவ்வொரு பக்தரின் மனதையும் கட்டிப்போடுகிறது.

இயற்கையின் அழகும், வரலாற்றுப் பெருமையும், எல்லையற்ற அம்மனின் அருள் சக்தியும் ஒன்றாக இணைந்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் திருக்கோவில், நம் வாழ்நாளில் நிச்சயம் தரிசிக்க வேண்டிய புண்ணிய தலங்களில் ஒன்றாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar