Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள் ராஜபாளையத்தில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
10:08

 திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து ஏற்பட்ட நெரிசலால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து வருகின்றனர். நேற்று, முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.


இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று, முருகப்பெருமானை தரிசித்தனர். முன்னதா க, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு, சஷ்டியை ஒட்டி, உற்சவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகன் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரும்பாலான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலை மை யில், 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar