பழநி: பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 2வது நாளான நேற்று ரொக்கம் ஒரு கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 890 ரூபாய். தங்கம் 171 கிராம். வெள்ளி 5 ஆயிரத்து 345 கிராம். அமெரிக்கா, சிங்கப்பூர். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் கரன்சிகள் 1084 இருந்தன. தங்கத்தால் ஆன வேல், திருமாங்கல்யம், செயின், மோதிரம் போன்றவைகளும் இருந்தன.இதில், திருஆவினன்குடி கோயில், இடும்பன்கோயில், ஒட்டன் சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் கோயில் உண்டியல்களின் வசூலும் அடங்கும்.கடந்த 2 நாட்களாக நடந்த உண்டியல் எண்ணிக்கையில், மொத்த வசூல் 3 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 540 ரூபாயை எட்டியுள்ளது. இன்று 3வது நாளாகவும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறுகிறது.