வில்லியனூர்: ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில் வரும் 9ம் தேதி தை அமாவாசையன்று கருட சேவை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணியளவில் சங்கராபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. கூடப்பாக்கம்: ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில் தை அமாவாசை முதலாமாண்டு கருட சேவை வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 5.30 மணியளவில் உதய கருட சேவையும், காலை 8.30 மணியளவில் சங்கராபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹரி நமோ நாராயணா செய்துள்ளார்.