திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2026 10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை மீது மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள, 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடமிருந்து கொள்முதல் செய்து, நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கோடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும், 21ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 24ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவிலில் தொடங்கப்பட்டுள்ள நெய் காணிக்கை கவுன்டரில் செலுத்தலாம். நேரில் வர முடியாத பக்தர்கள், ஆன்லைன் வாயிலாகவும் செலுத்தலாம்.