செயல்களில் துணிச்சல் மிகுந்த ரிஷபராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சனி, ராகு, சூரியன், புதன், செவ்வாய் செயல்படுகின்றனர். திட்டமிட்ட பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பணமழை பொழியும். நன்மை அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் கிடைக்கிற வசதியை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வீர்கள். புத்திரர் விரும்பிக்கேட்ட பொருட்களை தாராள செலவில் வாங்கித்தருவீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து, பிறர் செய்த அவமரியாதை செயல்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவர். நண்பர்களுடன் சீரான நட்பு இருக்கும். தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை அதிகப்படுத்தி ஆர்வமுடன் செயல்படுவர். ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவர். சராசரி பணவரவுடன், ஓரளவு சலுகை வந்துசேரும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பதால் ஒற்றுமை சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் திறமைமிகு செயலால் பணிக்கு பெருமை சேர்த்திடுவர். பதவி உயர்வு, சலுகை பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர் பெற்று உற்பத்தி, விற்பனையில் புதிய சகாப்தம் படைப்பர். நவீன உபகரணங்கள் வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முக்கிய பணிகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் உபரி பணவரவு கிடைக்கும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். துர்க்கையை வழிபடுவதால் மனதில் தைரியம் நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 5.3.13 இரவு 7.09 முதல் 7.3.13 இரவு 9.40 வரை வெற்றி நாள்: பிப்ரவரி 22, 23, 24 நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »