மேஷம்: குடும்ப மகிழ்ச்சி! ..மாசி ராசிபலன் (13.2.2013 முதல் 13.3.2013)
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2013 12:02
உழைப்பால் வாழ்வில் உயர்வுபெறும் மேஷராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக குரு, முக்கூட்டு கிரகநிலையில் உள்ள சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். உழைப்பிற்கான நற்பலன் அதிகரிக்கும். வருமானம் சீராகும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்தியளிக்கும். தாய்வழி உறவினர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வர். புத்திரர் ஆர்வத்துடன் செயல்பட்டு படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். அவர்களைக் கண்டு பெருமை காண்பீர்கள். பூர்வ சொத்தில் வருமானம் கூடும். எதிரியும் மனம் திருந்தி உங்களுடன் நட்பு பாராட்ட முன்வருவர். ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் குடும்பவளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசிப்பர். உறவினர்களின் வருகையால் கலகலப்பு உண்டாகும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக் கும். சிலருக்கு தந்தை வழியில் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி ஆதாயம் பெறுவர். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனை, லாபத்தில் வளர்ச்சி அடைவர். பணியாளர்கள் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்றி முடிப்பர். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். குடும்ப பெண்கள் தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். ஆடைஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்கள் அனுபவசாலிகளின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னேறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை பெருக்கி ஆதாயத்தை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள் தாராள மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் லாபம் பெறுவர். மாணவர்கள் மன ஒருமையுடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர். மீனாட்சியை வழிபடுவதால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 3.3.13 மாலை 4.43 -5.3.13 இரவு 7.08 வெற்றிநாள்: பிப்ரவரி 20, 21, 22 நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »