அனைவருக்கும் உரிய மதிப்பளிக்கும் மிதுனராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், கேது நற்பலன் வழங்குகிற இடங்களில் அமர்ந்துள்ளனர். மனதில் ஆடம்பர நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களின் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசி அதிருப்திக்கு ஆளாவீர்கள். கவனம். வீட்டின் பாதுகாப்பு கருதி உரிய நடவடிக்கை எடுப்பீர்கள். வாகனப் பயணத்தில் மிதவேகத்தைக் கடைபிடிப்பது நல்லது. புத்திரர் படிப்புக்காக பணச்செலவு அதிகரிக்கும். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படலாம். சத்தான உணவு, சரியான ஓய்வு மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முயல்வீர்கள். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு கிடைக்க காத்திருக்க நேரிடும். வெளியூர்ப் பயணங்களைப் பயன் அறிந்து மேற்கொண்டால் வீண் செலவைத் தவிர்க்கலாம். குடும்ப சூழ்நிலை உணர்ந்து தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவர். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தத்தில் சேர்வதற்காக சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவர். உற்பத்தி, பணவரவு சீரான அளவில் இருக்கும். வியாபாரிகள் விற்பனை அணுகுமுறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவர். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற்றுவதில் சுணக்கமும், குளறுபடியும் எதிர்கொள்வர். சலுகை கிடைப்பதில் தாமதம்உருவாகும். பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப குடும்பச் செலவைத் திட்டமிடுவர். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்திடம் பெற்ற நற்பெயரைப் பாதுகாக்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் உற்பத்தி, விற்பனையில் சராசரி நிலையை அடைவர். அரசியல்வாதிகள் விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொள்வர். சிவனை வழிபடுவதால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 7.3.13 இரவு 9.41- 9.3.13 இரவு 1.13 வெற்றி நாள்: பிப்ரவரி 25, 26 நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 7, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »