அனைவர் கருத்தையும் மதித்து நடக்கும் கடகராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சுக்கிரன், குரு செயல்படு கின்றனர். முன்யோசனையுடன் செய்யும் எந்த செயலும் வெற்றி பெறும். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். கடுமையாக பாடுபட் டால் தான் பணத்தட்டுப்பாட்டை தீர்க்க முடியும். வீடு, வாகன ஸ்தானத்தில் சனி, ராகுவின் அமர்வு உள்ளது. இதனால் வீட்டுக்கு தகுந்த பாதுகாப்பும், பயணத்தில் மிதவேகமும் நற்பலன்பெற உதவும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சிபெற ஆர்வம் கொள்வர். விலை மதிப்புள்ள பொருட்களை பயன்படுத்துவதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவின் அளவு குறையும். உடல்நிலை பாதிக்கலாம். தெருக்களில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் தொந்தரவு தரும். புதிய கடன் வாங்க நேரிடும். தம்பதியர் குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவர். நண்பர்களின் ஆலோசனை உங்கள் மனதில் நம்பிக்கையையும்,மாற்றத்தையும் உருவாக்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரிக்கும். குறைந்த லாபம் கிடைக்கும். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் பதவி கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு, விற்பனையில் ஓரளவு முன்னேற்றம் பெறுவர். அபிவிருத்தி பணி சிறு அளவில் நிறைவேறும். பணியாளர்கள் மனதில் தைரியத்துடன் செயல்படுவர். வேலைகள் வேகமாக முடியும். சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். வீட்டுச்செலவுக்கு பணத்தட்டுப்பாடு காரணமாக கடன் வாங்க நேரிடும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே, பணிகளை முடிக்க முடியும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் நன்னிலை காண்பர். சுமாரான லாபம் உண்டு, பழையபாக்கி வசூலைத் தீவிரப்படுத்தினால் பணப்புழக்கம் சரளமாகும். அரசியல்வாதிகள் புகழை பாதுகாத்துக் கொள்ள அக்கறையுடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் இல்லாவிட்டால் மதிப்பெண் குறையும்., ஆசிரியர், பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். லட்சுமி தாயாரை வழிபடுவதால் குடும் பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
உஷார் நாள்: 9.3.13 இரவு 1.14 முதல் 12.3.13 காலை 6.32 வரை வெற்றி நாள்: மார்ச் 8, 9 நிறம்: நீலம், சிவப்பு எண்: 1, 4
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »