Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் பரணி தீபம் எவ்வாறு ஏற்ற ... 1.08 லட்சம் தேங்காய்களால் லிங்கம் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு 1.08 லட்சம் தேங்காய்களால் லிங்கம் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் நடந்த கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் நடந்த கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 நவ
2026
02:11

செஞ்சி

செஞ்சி அடுத்த கீழ்பாப்பாம்பாடி சீதா தேவி சமேத கோதண்டராமர் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமமும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, கீழ்பாப்பாம்பாடி கிராம முன்னாள் துணைத்தலைவர் சேகர், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

வாலாஜாபாத்

பழையசீவரத்தில் துவார கணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் கிராமத்திற்கு சொந்தமான துவார கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடம் பழுதடைந்ததை அடுத்து சீரமைப்பு பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சில மாதங்களுக்கு முன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. கோவிலுக்கு புதிதாக மண்டபம் அமைக்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு கலசம் புறப்பாட்டை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில், பழையசீவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம், காகுப்பம் எம்.ஜி.ஆர்., நகர் தர்மசாஸ்தா கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ரக் ஷாபந்தனம், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி 9:30 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா ஆகிய சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

சிவகாசி

சிவகாசி காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசநம் பிம்பசுத்தி மூர்த்தி, ரக்ஷா பந்தனம் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மானாமதுரை

வேம்பத்துார் கற்பக விநாயகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 9:40 மணிக்கு பூர்ணாகுதி முடிவடைந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து 10:05 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது. விழாவில் வேம்பத்துார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி

ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, 20ம் தேதி, பகல், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணிவரை, அனுக்ஞை ஆசார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், திவ்ய பிரபந்த வேத போராயணம், பூர்ணாகுதி மற்றும் திருவாராதனம் சாற்று முறை நிகழ்ச்சி நடந்தது. 21ம் தேதி காலை, 8:00 மணி முதல் பகல், 12:00 மணிவரை, திருபள்ளி எழுச்சி, அலங்கார திருமஞ்சனம் மற்றும் பெருமாள் யாக சாலைக்கு எழுத்தருளல் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம், புதிய அக்ரஹாரம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் துவங்கி, கமர்சியல் சாலை வழியாக, ஸ்ரீனிவாச கோவிலை சென்று அடைந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முக்கிய திருவிழா நாளான, நேற்று காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஐயனுக்கு அலங்காரம், திருவாராதனம், மங்கள ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகத்தை அடுத்து, பகல், 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை, 6:00
மணிக்கு, ஐயனின் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ மாலை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar