பதிவு செய்த நாள்
23
நவ
2026
02:11
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பிரம்மரிஷி மலை உச்சியில் வரும், 24ம் தேதி மாலை, 6:00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
நேற்று, பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள செப்பு கொப்பைறைக்கு பூஜை நடந்தது.
மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் தீபத்திருவிழாவுக்கு, 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 1,008 லிட்டர் நெய்யுடன் நல்லெண்ணெய்,
இலுப்பை எண்ணெய் மற்றும், 108 கிலோ கற்பூரம் கலந்து, ஐந்து அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
நாளை மாலை, 6:00 மணியளவில் மலைமீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.