சீர்காழி தாளபுரீஸ்வரர்சுவாமி கோயில் கோயிலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2026 02:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெருவில் ஓசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர்சுவாமி கோயில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பொற்தாளம் வழங்கியதாகவும், அந்த தாளத்திற்கு அம்மன் ஓசை வழங்கியதாலும் இத்தலத்தில் பெயர் பெற்று காட்சி தருவதாக கோயில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் கோயில் தீர்த்தக்குளம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள அங்கு சூரிய பகவானுக்கு காட்சிஅளிக்கும் ஐதீக நிகழ்வும், தொடர்ந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. கார்த்திகேய சிவாச்சாரியார் பங்கேற்று பூஜைகளை செய்திருந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.