Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: நிதானம் தேவை பங்குனி ராசி பலன் (14.3.13 முதல் 13.4.13 வரை) பங்குனி ராசி பலன் (14.3.13 முதல் 13.4.13 வரை)
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மீனம்: ஆடம்பரம் ஆபத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2013
12:02

தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்ற மீனராசி அன்பர்களே!
இந்த மாதம் உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் சுக்கிரன், தினகதி சுழற்சியில் உள்ள சந்திரனின் பலம் மட்டுமே உதவும் வகையில் உள்ளது.  சிறிதும் பயன் தராத வீண் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரசிந்தனை மேலோங்கும். சிக்கனமாகச் செயல்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கடன்வராமல் தவிர்க்க முடியும். தம்பி, தங்கை பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். தாய்வழி உறவினர்களிடம் பழைய விவகாரம் குறித்து பேசவேண்டாம். புத்திரர் கவனக்குறைவால் படிப்பில் பின்தங்குவர். அவர்களை ஊக்கப்படுத்தினால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். பழைய கடனை அடைக்க புதிதாக கடன் வாங்க நேரிடும். உடல்நலனில் அக்கறை அவசியம். கடின அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாவீர்கள். தம்பதியர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழிலதிபர்கள் உற்பத்தியின் தரம், அளவை சீர்ப்படுத்த அக்கறை செலுத்துவது அவசியம்.  நிர்வாகச்செலவு பன்மடங்கு உயரும். விற்பனை இலக்கை எட்டிப்பிடிக்க வியாபாரிகளுக்கு விடாமுயற்சி தேவைப்படும். வியாபாரத் தேவைக்காக கடன் வாங்குவோர் தகுதியான நபரிடம் மட்டும் வாங்குவது நல்லது.  பணியாளர் கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை விழிப்புடன் பின்பற்றினால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று மகிழ்வர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில்  பொறுப்புணர்வுடன் பணியாற்றுவது  அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். பணம் வசூலிப்பதில் நிதான அணுகுமுறை வேண்டும். அரசியல்வாதிகள் அவப்பெயர் வராத  வகையில் நேர்மையாகச் செயல்படுவது நல்லது. விவசாயிகள் செலவுக்குப் பணம் புரட்டுவதில் சிரமத்தை சந்திப்பர். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் ஆறுதல் அளிக்கும். மாணவர்கள் ஆடம்பரஎண்ணத்தை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வில் நன்மை சேரும்.

உஷார் நாள்: 1.3.13 மதியம் 12.33- 3.3.13 மாலை 4.42 மணி வரை
வெற்றி நாள்: பிப்ரவரி 17, 18, 19
நிறம்: சிவப்பு, ஊதா   எண்: 1, 8

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar