சபரிமலையில் இரண்டு மணி நேரம் பலத்த மழை: நனைந்தபடி மலையேறிய பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2026 11:11
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் நடப்பு மண்டல கால சீசனில் நேற்று முதல் முறையாக மழை வெளுத்து வாங்கியது.
கடந்த 17 -ம் தேதி சபரிமலையில் மண்டல காலம் தொடங்கிய நிலையில் காலநிலை சற்று சூடாகவே இருந்தது. நேற்று முன்தினம் வானம் மந்தாரமாக காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. நேற்று காலையில் அதிக வெப்பத்துடன் வெயில் அடித்தது. மாலை 3.00 மணிக்கு பின்னர் வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டது. 4.00 மணி முதல் மழை பலமாக பெய்ய தொடங்கியது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர். மாலை 6.30 மணி வரையிலும் மழை நீடித்தது. பக்தர்கள் நனைந்தபடி வந்து படி ஏறினர். பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் அனைத்து பகுதிகளிலும் கான்கிரீட் மற்றும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளதால் வழுக்கல் எதுவும் இல்லாமல் மழையில் நனைந்தபடி பக்தர்கள் மலையறினர்.