காரைக்கால்: காரைக்காலில் வக்பு வாரியம் சார்பில் மீலாது நபி விழா அம்பகரத்தூர் கிரசண்ட் மகாலில் நடந்தது. வக்பு வாரிய செயலாளர் சர்புதீன் வரவேற்றார். அம்பகரத்தூர் பள்ளிவாசல் முஜிபுர் ரகுமான், மின் திறள் குழுமத்தலைவர் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., நாஜிம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். கலெக்டர் அசோக்குமார், போலீஸ் சீனியர் எஸ்.பி.,ஆண்டோ அல்போன்ஸ் முன்னிலை வகித்தனர். முத்தவல்லிகள் ஹாஜி தமீம், அப்துல் ரகீம் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஜமாதுல் உலமா சபை துணைத் தலைவர் அப்துஷ்சுக்கூர் சிறப்புரையாற்றினார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வக்பு வாரிய முகமது அப்துல் ஜப்பார் நன்றி கூறினார்.