பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
ஷீரடி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, தினமும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தரிசனத்திற்காக வருகின்றனர். விடுமுறை நாட்களில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் தேவைக்கு, தினமும், 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், ஷீரடிக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஏரிகளில், நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது, ஒரு அடி அளவுக்கு மட்டுமே, இந்த ஏரிகளில் தண்ணீர் உள்ளதால், ஷீரடி நகருக்கு, இவற்றிலிருந்து தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.