ஈரோடு: ஈரோடு, நக்கீரர் வீதியில் ஸ்ரீசித்தி விநாயகர் மற்றும் புது எல்லை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்குகிறது. வரும், 20ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றுதலும், 28ம் தேதி அம்மன் புஷ்ப பல்லக்கில் நகர் உலாவும், ஏப்ரல், ஒன்றாம் தேதி காவிரி சென்று தீர்த்தம், பால்குடம், கபாலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக ஆதாரனை நடக்கிறது. 2ம் தேதி அம்மனுக்கு காய்கனி அலங்காரமும், 3ம் தேதி கும்பம் வாய்க்காலில் விடுதல், 4ம் தேதி மறுபூஜை நடக்க உள்ளது.