பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நாளை (மார்ச் 10) நடக்கிறது. இதையொட்டி, நாளை அதிகாலை சிறப்பு ஹோமமும், ஸ்வாமிக்கு நான்கு கால அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். * காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்வாமிக்கு நான்கு கால பூஜைஅபிஷேகம், அலங்காரம், பூஜையும் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். * தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்வாமிக்கு நான்கு கால அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.