தேனி: தேனியில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.தேனி வீரப்ப அய்யனார் கோயிலில், நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் தொடங்கிய அன்னதானம், விடிய, விடிய நடந்தது. அல்லிநகரம், தேனி மற்றும் சுற்றுக்கிராம மக்கள் கோயிலுக்கு வந்தனர். கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாஷி விநாயகர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வர முடையார் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கோயில்களுக்கு தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.