பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில்,மாசி பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.காலை 4.15 மணிக்கு கணபதி பூஜை, 5.45 மணிக்கு கொடியேற்றம், 6.24 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டனர். ஏப்ரல் 18ம் தேதி வரை 36 நாட்கள் மாசி பங்குனி விழா நடக்கிறது. விழா நாட்களில்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை,19ம் தேதி திருக்கோயில் கரகம், மது, முளைப்பாரி, 20ம் தேதி, காவடி, பூக்குழி இறங்குதல்,பால்குடம் எடுத்தல், முளைப்பாரி, காப்பு பெருக்குதலும், 21ம் தேதி, அம்மன் திருவீதி உலாவும், 22ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது.ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி செய்து வருகின்றனர்.
*அறநிலையத்துறை சார்பில், காப்பு கட்டுவதற்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.