நெல்லை டவுன் பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2013 10:03
திருநெல்வேலி:நெல்லை டவுன் பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.நெல்லை டவுன் பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் மாலை 9 மணிவரை கணபதி ஹோமம், கஜபூஜை, பசுபூஜை, நவக்கிரக பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு கும்பபூஜை, ஹோமம் நடந்தது. தொடர்ந்து மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை பரமேஸ்வரி அம்பாள் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.