பதிவு செய்த நாள்
16
மார்
2013
10:03
சுரண்டை: சுரண்டை அழகு பார்வதியம்மன் கோயிலில் 2ஆயிரத்து 508 திருவிளக்கு பூஜை நடந்தது. சுரண்டை அழகு பார்வதியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை கமிட்டி சார்பில் நடந்த 23ம் ஆண்டு பூஜை வழிபாட்டிற்கு குற்றாலம் விவேகானந்தா ஆஸ்ரம உரிமையாளர் மற்றும் தலைவர் அகிலானந்தர் சுவாமி தலைமை வகித்தார். சென்னை சுப்பிரமணியன், செல்வராணி, டாக்டர் விஜயன்அருணகிரி, சிவனுபாண்டி, பிரியா ஆறுமுகம் பிரதர்ஸ், முத்துலட்சுமி ஹோம் முருகன், லண்டன் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். கமிட்டி செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். மகாலட்சுமி ஆஸ்பத்திரி டாக்டர் முத்துலட்சுமி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். சென்னை கருப்பசாமிமுதலியார் பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விவேகானந்தா கேந்திர நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ஜானகிபுஷ்பம் விளக்கு பூஜை குறித்து பேசினார். அழகு பார்வதியம்மன் கோயில் பொறுப்பாளர்கள், ஏழு சமுதாய நாட்டாண்மைகள், பொறுப்பாளர்கள், திருவிளக்கு பூஜை கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஏ.பி.டி.தொண்டு நிறுவன ரத்ததான கழகத்தினர் மற்றும் கண்தான கழகத்தினர், சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரியா அழகுசுந்தரம், துணை தலைவர் செல்லத்துரைபாண்டியன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் மனோகர், உறுபினர்கள் சுந்தரக்குமார், பட்டுராஜ் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர். பொருளாளர் மனோகர் நன்றி கூறினார்.