பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா வரும், 23ம் தேதி துவங்கி, 27ம் தேதிவரை நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், 51ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வரும், 23ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 7.30 மணிக்கு மேல், 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மதியம், 12 மணிக்கு கொல்லுப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 8 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 12 மணிக்கு முன்னாள் சேர்மன் மாணிக்கம், முன்னாள் தலைவர் காவேரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வசந்தன் மற்றும் பக்தர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 8 மணிக்கு கிராமிய கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 25ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் ரமேஷ் குடும்பத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 9 மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது. 26ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி, காலை, 8 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜையும், 10 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறுதலும், மதியம், 12 மணிக்கு தானப்ப கவுண்டர் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி வரும் நிகழ்ச்சியை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். 9 மணிக்கு வாணவேடிக்கையும், கரகாட்டம், சிலம்பாட்டம் நடக்கிறது. 27ம் தேதி காலை, 9 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன் குடும்பத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சயன உற்சவமும், 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழா குழு தலைவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன், குருக்கள் பிரகாஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.