கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2013 11:03
உடன்குடி: தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் வரும் 25ம் தேதி பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது.தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் தென் பகுதியில் பிரசித்திப் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இவ்வருடமும் வருகின்ற 25ம்தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 26ம் தேதி காலை 9.30 மணிக்கு தாமிரபரணி ஆற்று தீர்த்தம் கொண்டு வருதல், 10.00 மணிக்கு வில்விசையும், 11.00 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ராமசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.