சத்ரபதி வீரசிவாஜியின் குருவாக இருந்தவர் சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர், தன் அதீத பக்தியால் ராமனின் பிறப்போடு அனுமனின் பிறப்பையும் இணைத்து விட்டார். தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டியாகம் நடத்திய போது, கிடைத்த தெய்வீகப் பாயசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகிய மூவருக்கும் கொடுத்தார். அப்போது சுமித்ரா அருந்திய பாயசத்தில் ஒருபங்கை வாயுதேவன் எடுத்துச் சென்று அஞ்சனாதேவிக்கு வழங்கினார். அதைப் பருகிய அவள், ராமனுக்கு ஈடான அனுமனைப் பெற்று மகிழ்ந்தாள்.