ஆனைமலை: ஆனைமலையில் 18 சித்தர்களுக்கு சித்தாமகாவிகாஸ் ராஜ பரிவார பூஜை நேற்று அதிகாலை நடந்தது.ஆனைமலை பெருமாள் சாமி மலையடிவாரத்தில் மஹாகுரு முத்திரை தியான சங்கமபீட வளாகத்தில் நடந்தது. வெண்கொற்றக்குடை, வெண்சாமரத்துடன், யானை (கஜம்), குதிரை (அஷ்வம்), காளை (ரிஷபம்) போன்ற இராஜ பரிவாரங்களுடன், ஜெண்டை சிங்காரி மேளங்களுடன் நேற்று அதிகாலை 18 சித்தர்களுக்கு மஹா கும்பங்களும், சித்தயோகி ஸ்ரீ மஹா குருவுக்கு ராஜ கும்பமும், ஆன்மிகப் பெரியோர்கள், சான்றோர்கள், துறவியர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்தாபிக்கப்பட்டது. 24ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு 18 சித்தர்களுக்கென அமைக்கப்பட்ட மலர் பந்தலில் ஸ்தாபிக்கப்பட்ட கும்பங்களில் சித்தர்களின் ஆற்றலை ஆவாகனம் செய்து ராஜ பரிவாரங்களோடு 18 சித்தர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த சித்த வழிபாட்டினை மஹாகுரு முத்திரை தியான சங்கமபீட நிர்வாகிகளும், கோவை ஒத்தக்கால்மண்டபம் சித்தேந்திரபீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் ததேவானந்த சரஸ்வதிசுவாமிகள் கலந்து கொண்டார்.