கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி கடைவீதியில் உள்ள நூறு ஆண்டு பழமையான வடக்குப்புற காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. எட்டாம் நாளான நேற்று, பக்தர்கள் சின்னகொட்டாம்பட்டி அய்யனார் கோயிலிலிருந்து தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மணப்பச்சேரி, பள்ளபட்டி, வலைச்சேரிபட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பத்தாம் நாளன்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று பாண்டாங்குடி ஊரணியில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். ஆரம்ப காலத்தில் கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தவர்கள் கோயிலை உருவாக்க உதவிய காரணத்தால், இங்கு பணிபுரிபவர்களுக்கு, ஆண்டுதோறும் முதல் மரியாதை வழங்குவது இன்றும் தொடருகிறது.