பதிவு செய்த நாள்
30
மார்
2013
11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று கும்பிஷேகம் நடந்தது. மார்ச் 26ம் தேதி காலை 7 மணிக்கு, அனுக்கை பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை 4 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை முடிந்து, 6 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, காலை 7.25க்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பின், மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, திசாஹோமம், சாந்திஹோமம், யாகபூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு, கருடபகவான் வானில் வட்டமிட, சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க. கும்பங்களில் புனித நீர் ஊற்றபட்டது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதசுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் மாரிமுத்து, ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் கணேசன், தொண்டி சரவணா நகைக்கடை உரிமையாளர் சரவணன், பாகம்பிரியாள் பைனானஸ் உரிமையாளர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சக்கரைஅழகு, விநாயகா மோட்டார் உரிமையாளர் ரமேஷ் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.