பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
11:04
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி விழாவின், 6ம் நாளான நேற்று நீர்வண்ணர், நாச்சியார் திருக்கோலத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி விழா பிரம்மோற்சவம் கடந்த மார்ச், 27ம் தேதி துவங்கியது. நீர்வண்ண பெருமாள் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அம்ச வாகனம், பல்லக்கு, சேஷ வாகனத்தில், வீதியுலா வந்தார். விழாவின், 6ம் நாளான நேற்று நீர்வண்ணர், நாச்சியார் திருக்கோலத்தில், பல்லக்கில் வீதியுலா வந்தார். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை, கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நாளை காலை, 9:00 மணிக்கு, தேர் திருவிழா நடைபெற உள்ளது.