பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. போடி பரமசிவன் கோயில் கொடியேற்று விழா அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. நேற்று காலை 7.05 மணிக்கு பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. காலை 10.35 மணிக்கு பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாரதனைகளும் நடந்தன. சுவாமி அலங்காரங்காரம், சிறப்பு பூஜைகளை சுந்தரம், பரமசிவம், சுப்பிரமணியர் கோயில் அர்ச்சகர் சோமஸ் கந்த குருக்கள், கணேசசாமி ஆகியோர் செய்திருந்தனர். சித்திரை திருவிழா ஏப். 15 ல் துவங்கி 23 வரை நடக்கிறது. அறக்கட்டளை செயலாளர்கள் பேச்சிமுத்து,கதிரேசன், முத்துராமலிங்கம், நிர்வாகஸ்தர்கள் குணசேகரன், ஆறுமுகம், அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லட்சுமி, நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், வர்த்தகர்கள் சங்க நிர்வாகஸ்தர்கள், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், அனைத்து ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.