பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முன்னிட்டு, நேற்று பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள, மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, வரும் சித்ராபவுர்ணமி தினமான 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவில், தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். இவ்விழாவை முன்னிட்டு, கோயில் அமைந்துள்ள மலையின் அடிவாரப்பகுதியான, பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மூங்கில் கொடியில், கண்ணகி படம் வரைந்த கொடியேற்றப்பட்டது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் நடந்த, இந்நிகழ்ச்சியில், தமிழக பக்தர்களும், கேரளா சார்பில் குமுளி ஐயப்ப சேவாசங்கம், ஸ்ரீ கணபதி பத்ரகாளி தேவஸ்தான உறுப்பினர்களும், கலந்து கொண்டனர்.