பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
11:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கடந்த மாதம், 17ம் தேதி துவங்கி, 30ம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு விழா அன்று, 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. விடயாற்றி உற்சவமாக, புஷ்ப பல்லக்கு மற்றும் பஞ்சமூர்த்திகள் விழா, இன்று நடைபெற உள்ளது. இரவு, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வருவர். கச்சபேஸ்வரர் கோவில் அருகே, வாணவேடிக்கை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.