பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
11:04
கருமத்தம்பட்டி: உலக நன்மை வேண்டி, விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. முத்துக்கவுண்டன்புதூர் விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நன்மைக்காக, எட்டாம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை (14/4/13) மாலை 4.00 மணிக்கு துவங்குகிறது. அவிநாசி ரோடு, சங்கோதிபாளையம் பிரிவில் நடக்கும் திருவிளக்கு பூஜையை, அலகுமலை, தபோவன நிறுவனர் சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி நடத்தி வைத்து, அருளாசி வழங்குகிறார். பூஜையில் சூலூர், முத்துக்கவுண்டன்புதூர், கொள்ளுப்பாளையம், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்கின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை இளைஞர் சக்சதி இயக்கத்தினர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.