பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கவுதமன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு கம்பம் போடுதல், 25ம் தேதி இரவு 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜை, 26ம் தேதி மதியம் 1:15மணிக்கு கொடியேற்றம், மாலை 3:00 மணிக்கு பூவோடு ஆரம்பம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு பூவோடு நிறைவு, மே 1ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், 3ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, இரவு 10:00 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது. 4ம் தேதி காலை 8:50 மணிக்கு கொடி இறக்கம், பகல் 11:00 மணிக்கு மகாபிஷேகமும் நடக்கிறது. 26ம் தேதி முதல் தினசரி இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி, கோவில் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. குட்டைத்திடலில், 26ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை தினசரி இரவு 10:00 மணிக்கு சுழலும் சொல்லரங்கம், இன்னிசை, மெல்லிசை விருந்து, நாட்டியாஞ்சலி, பல்சுவை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.